லண்டன்:
ங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த  வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து எடுபடவில்லை.. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக  கேமரூன் அறிவித்தார்.

பிரதமர் பதவியை  கேமரூன் நேற்று  ராஜினாமா  செய்ததை  இங்கிலாந்து ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டு புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார்.
கேமருனுக்கு இந்திய உணவு வகைகிளின் மீது அலாதி பிரியம். நேற்று பதவி விலகிய  டேவிட் கேமரூன், தனது கடைசி இரவு உணவாக இந்திய உணவுகளை  விரும்பி உட்கொண்டதாக தகவல்  வந்துள்ளது.
லண்டனில் இருக்கும் இந்திய உணவகமான கென்னிங்டன்  தந்தூரி தனது டிவிட்டரில் கேமரூனின் “லாஸ்ட் சப்பர்” (இறுதி இரவு உணவு) என்ற பெயரில்  தகவல்களை  பகிர்ந்துள்ளது.
டேவிட் கேமரூன் தனக்கு பிடித்த சுவையான  ஐதராபாத் குங்குமப்பூ சிக்கன், காஷ்மீரி ரோகன்  ஜோஷ், வெஜிட்டபிள்  சமோசா,  நான் பிரட், அரிசி  சாதம் போன்ற  உணவுகளை  விரும்பி  உண்டதாக  உணவக  மானேஜர் கௌசர்  கூறியுள்ளார்.
தங்களது உணவகம், அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் விரும்பி உணவு உண்ணும் உணவகம் என்றும்,  நம்பர் 10. டவுணிங் தெருவில் வசித்து வருபவர்களை  அனைவரும்  எங்களது  ரெஸ்டாரண்ட்  துவக்கிய 1985 முதல் இந்திய உணவு வகைகளை விரும்பி  சாப்பிட்டு வருகின்றனர்  எனக் கூறினார்.
பிரிட்டன்  பிரதமரின் அதிகாரப்பூர்வ  இல்லம் டவுணிங் தெருவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.