சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அதுகுறித்து ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் சம்மன் அனுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 30ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, விசாரணைக்கு ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவகாசம் கோரியிருந்தார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் அறிவுறுத்தி உள்ளது.