டெல்லி:  சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயதான ஆர்ஜேடி தலைவர் லாலுவுக்கு அவரது மகள் ரோகிணி கிட்னி தானம் வழங்குகிறார். இதற்கான அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக லாலு இந்த மாதம் சிங்கப்பூர் செல்கிறார்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், முன்னாள் பீகார் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலுபிரசாத் யாதவ் மீது மாவட்டுத்தீவன ஊழல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இதில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட லாலு உடல்நலப் பாதிப்பு காரணமாக, தற்போது பரோலில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்ய மகள் ரோகினி முன்வந்துள்ளார்.  சிங்கப்பூரில் வசிக்கும் லாலுவின் இரண்டாவது மகள் ரோகினி, தனது தந்தையின் சிறுநீரக பிரச்சினை குறித்து அறிந்த நிலையில், அவருக்கு சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க, கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூர் அழைதுதுச் சென்று, அங்குள்ள பிரபல மருத்துவமனையில்  ஆலோசனை நடத்தினார். அப்போது, லாலுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், லாலுவுக்கு  சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார். இதன் காரணமாக, லாலு விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள்  ரோகினி ஆச்சார்யா சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர் சிறுநீரகம், தானம் செய்ய முடிவு செய்ததை அடுத்து, இப்போது புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆரம்பத்தில் ரோகினி தனது உயிரைக் காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்வதை விரும்பவில்லை என்று அறியப்படுகிறது, ஆனால் குடும்பத்தினர்  அழுத்தத்திற்குப் பிறகும், குடும்ப உறுப்பினர்கள் சிறுநீரக தானம் செய்யும் போது வெற்றி விகிதத்திற்கும் பிறகு அவர் மனந்திரும்பி சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  நவம்பர் 20 முதல் 24ஆம் தேதிக்குள் லாலு மீண்டும் சிங்கப்பூர் செல்கிறார். , அப்போது அவருக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.