பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காவனிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரா ரெட்டி (42). இவரது மகள் பிரியா  (17) தனியார் கல்லூரியில் பியூசி படித்து வந்த பிரியா ரெட்டிக்கும், அவருடன் படித்த தலித் இளைஞர் ஒருவருக்கும் காதல் அரும்பியது.
இதையறிந்த மாணவியின் தந்தை பைரா ரெட்டி, பிரியா ரெட்டியை கண்டித்துள்ளார். ஆனால், பிரியா  தனது காதலனை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறார்.
இதனால், பிரியா ரெட்டியை அவரது தந்தையும், குடும்பத்தினரும் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.   ஆனாலும் பிரியா  தனது காதலில் உறுதியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பைரா ரெட்டி திருப்பதிக்கு செல்வதாக கூறி குடும்பத்தினர் அனைவரையும் காரில் அழைத்துச் சென்றார்.  ஆனால், கோலாரை அடுத்துள்ள தம்டம்பள்ளி கிராமத்தில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டில் காரை நிறுத்தினார்.
download (1)
பிறகு பிரியாவை அவரது தந்தை பைரா ரெட்டி மற்றும் தாயார், சகோதரன் ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்டை வீட்டார் போலீஸாரில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரியாவின்  குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தனது மனைவி, மகனுடன் இணைந்து மகள் பிரியாவை கொலை செய்ததை  பைரா ரெட்டி ஒப்புக் கொண்டார். பைரை ரெட்டி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனனர்.