சென்னை: மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார அடிப்படையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கான நிவாரணங்கள் விஷயத்தில் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்த பல்வேறு தேர்வுகளுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான என்சிஹெச்எம் நுழைவு தேர்வு, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின் பிஎச்டி நுழைவுத்தேர்வு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்தும் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலை நுழைவுத் தேர்வு போன்றவைகளுக்க விண்ணப்பிக்கவும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சேர்ந்து கல்லுாரிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 வரையும், சிஎஸ்ஐஆர் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே15ம் தேதி வரையும், ஆயுஷ் முதுநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் 31ம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.