டெல்லி: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே..”  கருப்பு அறிக்கையை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், மோடி அரசால் நாட்டின் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு,  நாடாகடந்த காங்கிரஸ் ஆட்சி தொடர்பான  வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என அறிவித்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில்,  பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘கடந்த 2014ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு முன்னரும், பின்னரும் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் இருந்த பொருளாதார நிலை குறித்தும், அதற்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பொருளாதாரத்தின் நிலையை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும்,  ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையானது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். அன்றைய நிகழ்ச்சி நிரலில், எவ்வித விவாதமும் இருக்காது, இந்த அறிக்கையானது, பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை வெளியட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே, நிகழ்ச்சியில் பேசும்போது, 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் பல்வேறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டார்.
அப்போது, காங்கிரஸ் தலைமையிலான 2014ம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என்றும், பாஜக ஆட்சியால் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என்றார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருப்பு அறிக்கையில்,   இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுகிறது. பெண்கள் பாதி்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்கள் அநீதி இழைக்கப்படுகிறது என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது.