சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 115அடியை எட்டி உள்ளத.

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளதால்,  ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​படு​கிறது. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. உபரி நீர்வரத்து காரணமாக நேற்று(ஜூன் 26) காலை வினாடிக்கு 18,290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 37,263 கன அடியாகவும், இன்று(ஜூன் 27) காலை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு . பரிசல் சவாரிக்கும், அருவியில் குளிக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. நேற்று முன்​தினம் மாலை​ 16,000 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடி​யாக​வும், மாலையில் 50,000 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. இதனால் ஒகேனக்​கல் பிர​தான அருவிக்கு செல்​லும் நடை​பாதை தண்​ணீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும், பிர​தான அருவி உள்​ளிட்ட இடங்​களில் வெள்​ளம் ஆர்ப்​பரித்து ஓடு​கிறது.

வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்​சி​யர் சதீஷ் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், ஆற்​றி​லும், அருவி​களி​லும் குளிக்க 3 நாட்​களுக்கு முன்பு அறிவிக்​கப்​பட்ட தடை​யும் தொடர்ந்து அமலில் உள்​ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அடிபாலாறு செட்டிபட்டி உள்ளிட்ட முகாம்களில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.