சென்னை: நரிக்குறவர்களைப் போல தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடந்த 17-12-2013 அன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சட்டம் (பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2013-ன் அடிப்படையில் நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மத்திய அமைச்சரவை முடிவுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இணைப்பை நீண்ட காலமாக தி.மு.க. கோரிவந்துள்ளது என்று தாங்கள் அறிந்திருக்கலாம். உங்களது அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக எங்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது பெரும் திருப்தி அளிக்கிறது. விரைவான அரசியல் சட்டதிருத்தத்தின் மூலமாக சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பின்தங்கியுள்ள நரிக்குறவர்கள் பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ள பயன்களைப் பெற்று முன்னேறுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
download (1)
1970-ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முதல் முறையாக தொகுப்பு வீடுகள் திட்டத்தை அமலாக்கியதுடன் நரிக்குறவர்களுக்கு பல்வேறு விதமான நிதி உதவிகளை அளிப்பதற்காக அவர்களுக்கென்று ஒரு நலவாரியத்தை அமைத்தது என்பதை நினைவு கூர்கிறேன். இது தொடர்பாக, பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடையக்கூடிய இதுபோன்ற மேலும் 2 கோரிக்கைகளை தங்களது கவனத்துக் கொண்டுவரவிரும்புகிறேன்.
ஒன்று தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தகுதி வழங்குவதாகும். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போது அவர்கள் அதுவரை அனுபவித்து வந்த உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதாலும் மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதாலும், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினராகவே கருதப்பட்டு அனைத்து சலுகைகளும் உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. கோரிவந்துள்ளது
இதுபோன்ற சலுகைகளை இப்படிப்பட்ட மதமாற்றங்களுக்கு அளித்துள்ள முன்மாதிரிகள் உள்ளன. அதாவது சீக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தமத கிறிஸ்தவர்கள். சொல்லப்போனால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. இப்பிரச்சினையை 25-10-1996, 7-8-2006, 2-4-2010 ஆகிய தேதிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளது.     இதுபோன்ற சலுகைகளை இப்படிப்பட்ட மதமாற்றங்களுக்கு அளித்துள்ள முன்மாதிரிகள் உள்ளன.
அதாவது சீக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தமத கிறிஸ்தவர்கள். சொல்லப்போனால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. இப்பிரச்சினையை 25-10-1996, 7-8-2006, 2-4-2010 ஆகிய தேதிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் மூலமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளது.
மற்றொரு கோரிக்கை மீனவர் சமுதாயத்தை கடல்சார் பழங்குடியினராக பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதாகும். மீனவர் சமுதாயம் அவர்களது புவியியல் தன்மையின்படியே சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பழங்குடியினர் போலவே உள்ளனர். அவர்களுடைய பிரதான தொழில் மீன் பிடிப்பது என்பதால் வாழ்க்கையின் பெரும் பகுதியை அவர்கள் கடலிலேயே கழித்து வெளி உலகுடன் தொடர்பின்றி உள்ளனர்.
அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உரித்தானபடி அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி புத்தொளியைக் காண வழிபிறக்கும். எனவே, தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர் சமுதாயம் தொடர்பான இந்த 2 கோரிக்கைகளையும் தாங்கள் முறையாகப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் மத்திய அரசு விரைவில் சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” – இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.