ர்மசாலா

சீனாவை விட்டு வெளியேறும் போது தனக்கு பாதுகாவலராக இருந்த நரேன் சந்திர தாஸ் என்னும் ராணுவ வீரரை 60 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலாய் லாமா சந்தித்துள்ளார்.

புத்த மதத் தலைவர் தலாய் லாமா திபெத்தில் வசித்து வந்தார்.    சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின் அவர் அங்கிருந்து வெளியேறினார்.   அவர் வெளியேறும் போது அவருக்கு பாதுகாவலாக நரேந்திர தாஸ் என்னும் ராணுவ வீரர் தலைமையில் ஆறு ராணுவ வீரர்கள் உடன் வந்தனர்.    இந்த சம்பவம் கடந்த 1959ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

தற்போது தலாய் லாமா நடத்திய அறுபதாம் ஆண்டு விழா நிகழ்வில் திபெத் பிரதமர் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.    இந்த விழாவில் நரேன் சந்திர தாஸை அழைத்து தலாய் லாமா கௌரவப் படுத்தி உள்ளார்.   கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகும் நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தலாய் லாமா கௌகாத்தியில் தாஸை சந்தித்தார்.

அப்போது அவர் தாஸை இந்த விழாவுக்கு அழைத்தார்.  தன்னுடைய உடல்நிலையையும் மீறி தலாய் லாமாவின் அழைப்பை ஏற்று வந்த நரேன் சந்திர தாஸுக்கு முக்கிய விருந்தினர் என வரவேற்பு அளிக்கப்பட்டது.   விழாவில் தலாய் லாமா அவரை கட்டி அணைத்து  ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றார்.

இருவரின் இந்த 60 ஆம் ஆண்டு சந்திப்பால் தலாய் லாமா மனம் நெகிழ்ந்தார்.    அத்துடன் இந்த சந்திப்பால் பார்வையாளர்களும் மனம் நெகிழ்ந்தனர்.    நரேன் சந்திர தாஸுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள பார்வையாளர் கூட்டம் அலை மோதியதும் அவர் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.