
திபெத்
மியான்மர் கலவரத்தில் ரோஹிங்க்யா இஸ்லாமியர்களுக்கு புத்த பகவானும் உதவவில்லை என புத்த மத தலைவர் தலாய் லாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ராணுவம், மற்றும் புத்த வெறியர்கள் நிகழ்த்திய கலவரத்தினால் ரோஹிங்க்யாவை சேர்ந்த 300000 இஸ்லாமியர்கள், தங்கள் உடமையை இழந்து வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
புத்த மதத் தலைவர் தலாய் லாமா திபெத்தில் இருந்து தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள செய்தியில் “இந்த வன்முறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ரோஹிங்க்யா இஸ்லாமியர்களுக்கு இந்த நேரத்தில் புத்த பகவான் உதவி இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காதது வருத்தமாக உள்ளது. இந்த தாக்குதல் கொடூரமானது. புத்தர் ஒருகாலும் இந்த தீவிரவாதிகளை மன்னிக்க மாட்டார். எனது சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை” என கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]