நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ் மற்றும் மணிரத்னம், வெற்றி மாறன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் 32 முக்கிய உறுப்பி னர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இயக்குனர் பாரதி ராஜாவுக்கு தாதா சாகேப் விருது வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின் றனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாரதிராஜா தனது வாழ்க்கையில் 43 ஆண்டுகள் சினிமாவில் செய்த சாதனை கள் மிகப் பெரியது. அவரது திரைப் படங்கள் வேலையின்மை, தீண்டாமை, சாதிப் போர், பெண் சிசுக்கொலை, பெண்கள் அதிகாரம், சமூக விழுமியங்கள் மற்றும் மனித உறவு போன்ற பல சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தென் னிந்திய மக்களிடையே ஒரு புதிய விழிப் புணர்வை உருவாக்கியது.
மேலும், பாரதிராஜாவின் படைப்புக்கள் தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய அலையை எவ்வாறு கொண்டு வந்தது. அவரது இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராஜேஷ் கண்ணா, கமல்ஹாசன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், நானா படேகர், சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், விஜய சாந்தி மற்றும் பலருடன் பணியாற்றினார். படங்களை இயக்கு வதைத் தவிர, பாரதி ராஜா இப்போது படங்களில் ஒரு நடிகராக முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவது இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப் புக்கு சரியான நேரத்தில் சரியான அங்கீகாரமாக இருக்கும்.
இவ்வாறு கடிததத்தில் கூறி உள்ளனர்.
கலைப்புலி எஸ் தாணு, ஆர் பார்த் திபன், பாலா, பிரியதர்ஷன், எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீகர் பிரசாத், பி லெனின் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த கடிதத் தில் கையெழுத்திட்டுள்ளனர். கையொப்ப மிட்டவர்கள் அனைவரும் தேசிய விருது வென்றவர்கள்.