எரும சாணி யூ-ட்யூப் சேனலில் நடித்த விஜய், ’நட்பே துணை’ மற்றும் ’நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அதோடு அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் எருமசாணி புகழ் விஜய் இயக்குனராக களம் இறங்குகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘D பிளாக்’ எனும் இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]