புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் தீவிர புயலாக மாறி, ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஒடிசா கடலோர மாவட்டங்களான கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன் தேசிய பேரிடர் மீட்பு படை உள்பட ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், 10 கி.மீ. வேகத்தில் ஒடிசாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலானது கரையை கடக்கும்போது மணிக்கு 185 கீ.மீவேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாஸ் புயல் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் உடைந்து விழுந்துள்ளன. மேலும் தற்காலிக பாலங்களும் இடித்து விழுந்துள்ளதாகவும், கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதாகவும், சுமார் 20 உயரத்துக்கு அலைக்கு எழுந்து ஆர்ப்பரிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாக மேற்குவங்கம் ஒடிசா மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் கடலோர மாவட்ங்களான கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், கட்டாக், கோர்டா மற்றும் பூரி ஆகிய இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.