திருவனந்தபுரம்,

டந்த நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஓகி புயல் கடுமையாக தாக்கியது.

இந்நிலையில், வாடிகனில் உள்ள போஸ் பிரான்சிஸ், ஓகி புயல் காரணமாக துன்பப்பட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள  மீனவர் சமுதாயத்திற்கு ஏற்பட்ட துன்பங்கள் குறித்து விசாரித்ததாகவும், அவர்களின் பாதிப்புக்காக பிரார்த்தனை செய்ததாகவும்  லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கடந்த சனிக்கிழமை தனக்கு வாடிகனில் இருந்த தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியர் ஓகி புயல் பாதிப்பு குறித்து போஸ் பிரான்சிஸ் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்று கூறியதாகவும்,  வாடிகன் ரேடியோடிவில் ஓகி புயல் குறித்து ஒளிபரப்ப 5 நிடங்கள் அளவிலான செய்திக தேவை என்றும் கேட்டதாக கூறினார்.

 

அதன்படி இங்கே லத்தீன் கத்தோலிக்க திருச்சபை மூலம் ஊர்வல ஏற்பாடு செய்யப்பட்டு மீனவர்களின் பாதிப்பு குறித்த செய்தியுடன்  அனுப்பியதாகவும் கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து,கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை போஸ் பிரான்சிஸ், ஓகி பாதிப்பு குறித்து ‘நினைவு கூர்ந்தும்,  புயலின் பாதிக்கப்பட்டவர்களுக்காவும்  பிரார்த்தனை செய்தார் என்றும் அவர் கூறினார்.

மேலும், சூறாவளி குறித்த் சரியான தகவல் கிடைக்கவில்லை என்றும், அரசுகள் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டே இவ்வளவு பாதிப்பு என்றும், அதை தான்  கடுமையாக கண்டிக்கிறேன்,” என்று பேராயர் கூறினார்.

இருந்தாலும்,

“தெரிந்தோ தெரியாமலோ தவறு ஏற்பட்டு விட்டது. உடனடியாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மீனவர்களின்  வாழ்க்கை மற்றும் சேதம் இழப்பு குறைவாக இருந்திருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

கடலோர மக்களுக்கு நீண்ட கால விரிவாக்க திட்டத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.