சென்னை: வங்க கடலில் உருவான ” மொந்தா” புயல் நாளை இரவு கரையை கடக்கிறது.  இதன் காரணமாக  சென்னையில்  இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு மோன்தா புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது இந்த புயலானது சென்னையிலிருந்து 600KM தொலைவில் உள்ளது. மெதுவாக சென்னை அருகே ஆந்திர கடற்கரையோரம் நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றுமுதல் சென்னை, திருவள்ளுர் உள்பபட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை சென்னை திருவள்ளுர் பகுதியல் கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில்  மணிக்கு 13 கிமீ வேகத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து,நேற்று நள்ளிரவில் “மொந்தா”என்ற சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த “மொந்தா”  சூறாவளி புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை 0230 மணி வரை அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது.

தற்போது இந்த புயலானது, சென்னை (தமிழ்நாடு) க்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 600 கிமீ, காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்-தென்கிழக்கில் 680 கிமீ, விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்-தென்கிழக்கில் 710 கிமீ, போர்ட் பிளேர் (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) க்கு மேற்கே 790 கிமீ மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 850 கிமீ தொலைவில் புயல் நிலைபெறுள்ளது.

அழ அடுத்த 12 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்காக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும். அதன் பிறகு அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து  நாளை) காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்,  வடக்கு-வடமேற்கு நோக்கி மேலும் நகர்ந்து,  நாளை (28ந்தேதி)  மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கும். புயல் கரையை கடக்கும்போது,   அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்திலும், உச்சபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, அரபிக்கடலிலும் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நிலையாக உள்ளது மற்றும் இன்று, அக்டோபர் 27, 2025 அன்று காலை 0230 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. பன்ஜிம் (கோவா) க்கு மேற்கே சுமார் 790 கிமீ, மும்பை (மகாராஷ்டிரா) க்கு மேற்கு-தென்மேற்கே 810 கிமீ, அமினிதிவி (லட்சத்தீவு) க்கு மேற்கு-வடமேற்கே 810 கிமீ மற்றும் மங்களூர் (கர்நாடகா) க்கு மேற்கு-வடமேற்கே சுமார் 940 கிமீ. அடுத்த 24 மணி நேரத்தில் இது கிழக்கு மத்திய அரபிக்கடலில் கிட்டத்தட்ட தென்கிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

மொந்த புயல் காரணமாக,   இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மேலும்,  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (அக்.28): திருவள்ளூரில் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை காலை முதல் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.