சென்னை: மொன்தா புயல்  காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மொன்தா புயல்  காரணமாக,  தமிழகத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திரம், ஒடிஸா வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இருந்து ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்குப் புறப்படும் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 20851 புவனேஷ்வர்  – புதுச்சேரி –  சூப்பர் பாஸ்ட் எக்ஸ் பிரஸ் ரயில்  இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 2085‘2 – புதுச்சேரி –  புவனேஷ்வர்  சூப்பர் பாஸ்ட் எக்ஸ் பிரஸ் ரயில்  நாளை  முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், விசாகப்பட்டினம் சென்ட்ரல் ரயில் (22869 மற்றும்  22870) ரயில் சேவைகள் இரண்டு நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12842 – சென்னை சென்ட்ரல் – ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் – 28.10.2025 அன்று காலை 07.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28-10-2025 அன்று இரவு 23.30 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 22870 – சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் – 28-10-2025 அன்று காலை 10.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 23.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 22604 – விழுப்புரம் – கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் – 28.10.2025 அன்று காலை 11.05 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28.10.2025 அன்று இரவு 7.00 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 12840 – சென்னை சென்ட்ரல் – ஹவுரா மெயில் ரயில் – 28.10.2025 அன்று 19.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 22.40 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது

ரயில் எண் 12664 – திருச்சிராப்பள்ளி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் – 28-10-2025 அன்று பகல் 13.35 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், மாலை 17.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண். 17235 SMVT பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 29, 2025 அன்று SMVT பெங்களூரில் இருந்து 17.15 மணிக்குப் புறப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.