சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாவதால், 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், நாளை மிக்ஜாம் புயலாக மாறி, டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசுலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.

புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி வருவாய்த்துறையினரிடம் கேட்டறிகிறார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.