சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

இந்த புயல் குறித்து கூறிய வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்,  பல சுழற்சிகள் ஏற்பட்டு ஒன்று புயலாக மாறும். அப்படித்தான் இப்போதும் நடக்கிறது. 3 சுழற்சிகள் சேர்ந்து வந்தது.. அதில் ஒன்று புயலாக மாறுகிறது. அதுதான் மழைக்கும் காரணமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல்ம்  தற்து  சென்னைக்கு 510 கிமீ கிழக்கு – தென் கிழக்கில்  மையம் கொண்டுள்ளது.  இது, புதுச்சேரிக்கு 500 கிமீ கிழக்கு தென் கிழக்கிலும் நெல்லூருக்கும் 630 கிமீ தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.

அதுபோல, பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 710 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக் கடலில் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 9 கி.மீ- என அதன் வேகம் குறைந்துள்ளது. இது நாளை  நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும்.  இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த மிக்ஜம் புயல்,  வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை ( 4ம் தேதி)  மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் சென்னை-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இந்த மிக்ஜம் புயல் கூறிய கூறிய வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்,  இந்த காற்றழுத்தம் காரணமாக, சென்னை போன்ற நகர்ப்புற இடங்களில் மழை எதிர்பார்த்ததுதான் என்றவர், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மழை மேகங்கள் கடலில் இருந்து கிழக்கு டூ மேற்கு திசையில் நகரும் போது மழை பெய்யும். மழை மேகங்கள் இப்படி நகரும் போது சூடு காரணமாக வலிமை அடையும். அதனால்தான்  சென்னையில் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்கிறது என்றவர், தற்போதைய நிலவரப்படி, வானிலை மையம் கணித்ததை விட அதிக மழை பெய்துள்ளது என்றார்.

தற்போது தெற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது தாழ்வு மண்டலம் ஆகும். இது போக இலங்கை கடல் அருகே காற்று சுழற்சி உள்ளது. அதேபோல் அரபிக்கடல் பகுதியில் ஒரு சுழற்சி உள்ளது. இவை எல்லாம் ஒரு பெல்ட் போல செயல்படுகின்றன. இவை மழை மேகங்களை கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்த்தி,. காற்றை தூண்டிவிட்டு மழையை பெய்ய வைக்கிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு வங்கக்கடலில் வந்து..தமிழ்நாடு கரையோரம் அருகே வரும். அப்போது அதிக மழை பெய்யும்.

சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல சுழற்சிகள் இருக்கும். இப்போது அப்படிதான். இது பெரிய சலனம். அதற்கு உள்ளே மூன்று சுழற்சிகள் உள்ளன. மூன்று சுழற்சிகள் வேறு வேறு இடத்தில் உள்ளன. அதில் ஒரு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்று புயலாகிறது . இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான் என்றார்.,