சென்னை; ஃபெஞ்சல் புயல் இன்று  90 கி.மீ. வேகத்திலான சூறாவளியுடன்  புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்பட புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்தம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று புயல் கரையை கடக்கும்ம் நிலையில், கடற்கரை சாலைகள்,   இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் ஏற்கனவே பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் சமயத்தில்,  சென்னையில் பொதுபோக்குவரத்த  தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை முதலே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளில் பேருந்து சேவைகள்  படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30 ஆம் தேதி) பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே  கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது.   கனமழை எச்சரிக்கை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.

புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும்,  கனமழை எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இன்று நடைப்பெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  புயல் தற்போது  சென்னையில் இருந்து தலா 190 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது  வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மதியம்  காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும், ஃபெஞ்சல் புயல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்  என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் பொதுபோக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதியில், புயல் காரணமாக வீசும் சுறாவளி மற்றும் கனமழை காரணமாக, பொது போக்குவரத்து, ரயில்களின் போக்குவரத்து போன்றை சில மணி நேரங்களில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ஜ் : புயல் கரையை கடைக்கும் போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நிச்சயமாக மின்தடை ஏற்படும். எனவே, அவசர தகவலுக்காக உங்களுடைய செல்போன்களை சார்ஜ் செய்யவும். அத்துடன், வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளவும்.

வானிலை அலர்ட் : எப்போதுமே அவரை தேவைக்காக வெளியே செல்கிறீர்கள் என்றால் நிச்சியமாக வானிலை தொடர்பான செய்திகளை படித்துவிட்டு செல்லுங்கள். வெளியே செல்லவேண்டாம் என அறிவிப்பு வந்தால் அதனை கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் இருங்கள்.

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் : கனமழை பெய்வதால் சில வீடுகளில் தண்ணீரை தேங்கும் அப்படி இல்லை என்றாலும் கூட உங்களுடைய வீட்டிற்குள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமோ அங்கு வைத்து கொள்ளுங்கள். பொருட்களை மட்டும் பாதுகாப்பான இடங்களில் வைக்காமல் நீங்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவும்.

அவசர கால பொருட்கள் : மழை நேரம் என்பதால் மருந்து மாத்திரை இயல்பாக கேட்டவுடன் கிடைப்பது சிரமம் எனவே, அதனை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவசர கால பொருட்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகளை தயாராக கைக்குள்ளே வைத்திருக்கவும்.

கால்நடைகள்/ செல்லப்பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும்.புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்லவும்.குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமிக்கவும். புயல் காலத்தை எதிர்கொள்ள அரசு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.