சென்னை: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாவட்ட மக்களுக்கு  ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி,  புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர்களின் குடும்ப அட்டைகளின் படி,  டோக்கன் விநியோகிக்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக  விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30 ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண பணிகளை வழங்கினார். இதயடுய்த்து ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும், இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாகவும்  குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக  விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, . 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.