சென்னை: ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில்,   ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை  தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நிதி வழங்கிய நிலையில், தற்போது முதலமைச்சர் நிதி வழங்கி உள்ளார்.

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட பெஞ்சல் புயல்  கடந்த 30 ஆம் தேதி இரவு  மாமல்லபுரம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.  இதற்கிடையில் மழை காரணமாக சாத்தனூர்அணையும் திறந்து விடப்பட்டதால் வட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டது.  இதன் காரணமாக மழை நீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். ”

இதையடுத்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண பணிகளை வழங்கினார்.

தொடர்ந்து,  வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் இன்று காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.