சென்னை:
வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கடுமையான புயலாக மாறி, தமிழகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் ரெட் அலட்ர்ட் கொடுத்து எச்சரிக்கை செய்திருந்தது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை முடுக்கி விட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பத்தை குறைத்து நல்ல மழையை கொடுக்கும் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஃபானி புயல், தமிழகத்தை ஏமாற்றி விட்டதாக, தற்போது சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புயல் திசை மாறி இருப்பதாகவும், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,
பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை என்றும், மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
ஃபானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும், இந்த புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.
ஃபானி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?
தமிழகத்துக்கு அருகே புயல் வந்துவிட்டு மழையைக் கொடுக்காமல் விலகில் செல்வது மிகவும் மோசமான நிகழ்வு என்று கூறியுள்ளவர், இந்த ஃபானி புயல் வராமலேயே இருந்து இருக்கலாம்” என்று தெரிவித்து உள்ளார்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த தமிழகத்தை ஃபானி புயல் மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்தாக தெரிவித்து உள்ளவர், சரியான நிகழ்வு என்ன என்பது நாளைதான் கணிக்க முடியும் என்றவர், ஃபானி தமிழகத்துக்கு தரப்போவது, கடுமையான வெப்பமா அல்லது என்பது நாளை தெரியும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இப்போது வரை புயல் மாதிரிகள் வேறு விதமாகவே இருக்கின்றன. குறைந்தபட்சம் இந்த புயல் சின்னம் தமிழகத்துக்கு சற்று தொலைவிலாவது கடந்து செல்லுமா என்பதையும் கொஞ்சம் மழையையாவது தருமா என்றும் அல்லது மேகமூட்டமாகவாவது இருக்குமா என்பதையும் பார்த்து வருவதாக தெரிவித்து உள்ளவர், அப்படி ஒன்று நடக்காமல் போனால், இந்திய தரைப்பகுதியில் இருக்கும் காற்றின் ஈரப்பதம் முழுவதையும் புயல் இழுத்துக் கொள்ளும். அதன் பிறகு வடமேற்கில் இருந்து வீசும் வறண்ட காற்றும், கடற்கரையில் இருந்து காற்று வீசாததும் சேர்ந்து நாம் வாழும் பகுதியை நரகமாக்கிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.