டெல்லி:
வங்கக்கடலில் உருவாகி நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்த அம்பான் புயல் பாதிப்பை ‘தேசிய பேரிடர்’ ஆக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 22 கட்சித்தலைவர்கள் கலந்துகொண்ட காணொளி காட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், மற்றொருபுறம் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையில், பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை எழுந்துள்ளன.
இந்த நிலையில், நாட்டின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மாலை 3 மணிக்கு சோனியா தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதங்களும், ஆலோசனைகளும் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜேடிஎஸ், சிவசேனா உள்பட 22 கட்சகிளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி, ஜேடிஎஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர், எஸ். எச்.டி.தேவேகவுடா, எஸ். ராகுல் காந்தி, எஸ். சரத் பவார், மேற்குவங்க முதல்வர், செல்வி. மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர், எஸ். உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர், எஸ். ஹேமந்த் சோரன், கம்யூ தலைவர்கள் எஸ். சீதா ராம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.கே.ஸ்டாலின், எஸ். டி.ராஜா, எஸ். ஷரத் யாதவ், எஸ். உபேந்திர குஷ்வாஹா, எஸ். தேஜஷ்வி யாதவ், எஸ். உமர் அப்துல்லா, எஸ். ஜிதன் ராம் மஞ்சி, எஸ். என்.கே.பிரமச்சந்திரன், எஸ். ஜெயந்த் சிங், எஸ். பத்ருதீன் அஜ்மல், எஸ். ராஜு ஷெட்டி, எஸ். பி.கே.குன்ஹாலிக்குட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எஸ். திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த கூட்டத்தில் அம்பான் புயல் பேரழிவை, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டு வந்தார். இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் கூட்டுத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில், அம்பான் புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவின் தாக்கத்தை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு கணிசமாக உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.