திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200 நாடுகளில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு இருக்கிறது.
கேரளாவிலும் கடந்த 2 வாரங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று இப்போது மெல்ல, மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறது. அம் மாநிலத்தில் இன்று மட்டும் புதியதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரில், 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 21 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.