சென்னை:
சென்னையில் சைக்கிள் ஆர்வலர்களின் தரவுகளைச் சேகரித்த பிரபலமான ஸ்ட்ராவா செயலி, இந்த ஆண்டு முழு அடைப்பின் போது ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுனர்கள் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராவா செயலியின் தரவுகளின்படி 2019 ஆம் ஆண்டு 85, 477 பயணங்களும் 2020 ஆம் ஆண்டில் 1,18,449 பயணங்களும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ட்ராவா செயலி என்பது உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் சைக்கிள் தடங்களை கண்காணிக்கும் மற்றும் சவாரி விபரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு செயலி ஆகும், இது பெரும்பாலும் நகரத்தில் உடற் பயிற்சி பெறும் சைக்கிள் ஓட்டுனர்கலால் பயன்படுத்தப்படுகிறது.
மிதிவண்டிகள் நகரங்களை மாற்றும் என நம்பும் ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த ஒரு சமூக நிறுவனத்தின் உறுப்பினரான ஃபெலிக்ஸ் ஜான், சென்னையில் சைக்கிள் ஓட்டுனர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் ஸ்ட்ராவா செயலியை பயன்படுத்தினார், அதில் 2019 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு மிதிவண்டி பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 38% அதிகரித்துள்ளதாக அவர் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் மிதிவண்டி பயணங்கள் 11,000 தொடங்கியிருந்தாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 20,000 எட்டியுள்ளது, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மிக அதிக அளவில் மிதிவண்டி பயணங்கள் இருந்ததாக ஸ்ட்ராவா செயலியின் தரவு தெரிவித்துள்ளது.