கோவை: கோவையில் தனியார் பேருந்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமான ஓட்டுநர் சர்மிளா மீது சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுனர் ஆன இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் வி.வி என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தன்னை பிரபலப்படுத்துவதற்காகவே இவர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஷர்மிளா வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கியதாக பேருந்து நிர்வாகத்தினர் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு சுமத்தினர்.
இந்த நிலையில், பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஐபிஎஸ்சி 506(i), 509, 66C சட்டதின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையின் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம். பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.
தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.