கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் 2018 நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடந்து வந்தன.   அந்தப் போட்டியில் இந்தியா உட்பட பல நாடுகள் கலந்துக் கொண்டன.

மகளிருக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாய்னா மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்துவை வென்று தங்கப் பதக்கம் பெற்றதும் சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றதும் தெரிந்ததே.

இந்தியாவை சேர்ந்த தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் மகளிர் ஸ்குவஷ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் கிடம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.   இவரை மலேசியாவின் லீ சாங் வென்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டேபில் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் இங்கிலாந்து வீரரை வென்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

இந்தியா மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள், 19 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளன.

மொத்தம்  65 பதக்கங்களைப் பெற்று இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.