கோல்டுகோஸ்ட்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சுசில்குமார், ராகுல் அவாரே ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் 74கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுசில்குமார் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ் போத்தாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவர் 57கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராகுல் அவாரே கனடாவின் ஸ்டீவன் தக்காகாசியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் 76கிலோ எடைப்பிரிவில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இந்தியாவின் கிரண், மொரிசியஸ் வீராங்கனை கடூஸ்காவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேபோல் மகளிருக்கான 53கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பபித குமாரி கனடாவின் டயானா வெய்க்கரிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

காமன்வெல்த் மல்யுத்தப்போட்டியில் ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டு தங்கம் கிடைத்தது
மகளிர் 76கிலோ எடைப்பிரிவில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இந்தியாவின் கிரண், மொரிசியஸ் வீராங்கனை கடூஸ்காவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேபோல் மகளிருக்கான 53கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பபித குமாரி கனடாவின் டயானா வெய்க்கரிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மகளிர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆஸ்திரேலியாவின் சுவான் யூ வெண்டி சென் ஆகியோர் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் 21க்கு 15, 21க்கு 9 என்கிற கணக்கில் வெற்றிபெற்றுக் காலிறுதிக்கு சிந்து முன்னேறியுள்ளார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இலங்கையின் நிலுக்கா கருணாரத்னேயைத் தோற்கடித்துக் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், மொரிசியசின் கிறிஸ்டோபர் ஜீன் பாலைத் தோற்கடித்துக் காலிறுதிக்கு முன்னேறினார்.