புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார் சஞ்சய் கோத்தாரி.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அரசின் அமைப்பான சிவிசி(Chief Vigilance Commission) எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக இருந்த கே.வி.செளத்ரி ஓய்வு பெற்றதையடுத்து, அந்தப் பதவி கடந்தாண்டு ஜூன் வரை காலியாக இருந்தது.
இந்நிலையில் சிவிசி எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையரை, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு கடந்த பிப்ரவரியில் தேர்வு செய்தது. இதன்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.
சமூக விலகலைப் பின்பற்றி, எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.