சென்னை: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற 2 ஆம் கட்ட கலந்தாய்வில் கல்லுரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர். இதுவரை 33,809 பெர் கல்லூரிகளில் சேர்த்நதுள்ளனர் என்றவர், இன்னும் 1.10 லட்சம் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புக்கான 4-வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் 12- ஆம் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் எனவும் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு காலியிடங்கள் இருக்காது என்றும்,