டெல்லி: நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடியு அறிவித்து உள்ளது.
கோரோனா பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் சரியான முறையில் செயல்படாத நிலையில், நடப்பாண்டு முதல் கல்வி நிறுவனங்கள் வழங்கம்போல் நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித்தேர்வு ஆஃப் லைன் மூலம் நேரடி தேர்வாகவே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இநத் நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்று ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவும், இறுதிக்கட்ட கலந்தாய்வு ஜூலை 20 அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்டு 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு மாணவர் சேர்க்கை கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.
மேலும் தனியார் மற்றும் அரசு பொறியியல் வகுப்புகளை நடப்பு கல்வி ஆண்டிலும் நேரடி மற்றும் ஆன்-லைன் வழியில் நடத்திக்கொள்ளலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.