புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதுச்சேரியில்  தற்போதுவரை 7பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  புதுச்சேரியில் 3 பேரும், மாஹே பகுதியில் 1 ஒருவரும்,  கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சார்ந்த 3 பேர் ஜிப்மரிலும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக  காரைக்கால், ஏனாம் உள்ளது. இவை பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், புதுச்சேரியில் மே மாதம் இறுதி வரை கூட ஊரடங்கு தொடர வாய்ப்பு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.