சென்னை

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.   இந்தியாவில் முதல் முறை நடைபெறும் இந்த போட்டியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.   இதற்காகப் பிரதமர் மோடி சதுரங்க கரை  வேட்டி சட்டையுடன் வந்துள்ளார்.  தற்போது பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒன்றாகத் தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கமலின் குரல் பதிவுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.  மயிலாடும்பாறையில் 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்றாகக் கூறப்படுகிறது.  இது குறித்த கலை நிகழ்ச்சி கமல்ஹாசன் குரலில் முப்பரிமாண வடிவில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாடகி தீ பாடிய எஞ்சாய் எஞ்சாமி என்னும்பாடல் அரங்கேற்றப்பட்டது.  இந்த பாடல் திருக்குரல் அறிவு தொகுப்பில் இடம் பெற்றதாகும்.  இந்த எஞ்சாய் எஞ்சாமி பாடல் பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் குரலில் அரங்கேற்றப்பட்டுள்ளது.