கடலூர்: 
டலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்.
கடலூர் மாவட்டம், எங்களது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமாக இருப்பவர் சி.வெ.கணேசன்.  இவரது  மனைவி பவானி அம்மையார் இன்று உடல் நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
திமுகவில் கீழ் மட்டத்திலிருந்து இன்றைக்கு அமைச்சர் பதவி வரை முன்னேறி வந்த கணேசன். அவரது மனைவியின் மறைவுக்குக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.