கொரோனா சிறப்பு மருத்துவமனையானது கடலூர் தனியார் பள்ளி: மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

Must read

கடலூர்: கடலூரில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிறப்பு மருத்துவமனைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் எதிர் பார்க்காத அளவுக்கு, கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றர்.
இன்று ஒரே நாளில் முதன்முறையாக கொரோனா தொற்றானது 200ஐ கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.  அதே நேரத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மே 2-ம் தேதிக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் ஜெயப்பிரியா மெட்ரிக் பள்ளி , இன்று முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாவட்ட நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மாலை கொரோனா சிகிச்சைக்கு தனிமைப்படுத்த சென்னையில் இருந்து வேப்பூர், தொழுதுர் சுற்றுப்புற பகுதிகளுக்கு வந்தவர்களை, 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

More articles

Latest article