கடலூர்:

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும்,  முன்னாள் கடலூர் மாவட்ட எம்.பி.யுமான  பிபி கலிய பெருமாள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85.

வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர்  மரணத்தை தழுவினார்.

பி.பி.கலியபெருமாள்

பி.பி.கலியபெருமாள் 1934ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி பிறந்தவர். எம்.ஏ.பி.எல் படித்த வழக்கறிஞர். அவரது மனைவி பெயர் ஜானகி. அவருக்கு ஒரு மகனும், 3 மகளும் உள்ளனர். அவரது மகன் பெயர் பி.பி.கே. சித்தார்த்தன். பிரபல வழக்கறிஞராக இருக்கிறார்.

பி.பி.கலியபெருமாள்  ஒன்றுபட்ட கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், சிதம்பரம் பார் அசோசியன் தலைவராக 1985ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.  கிராமப்புற தொழிலாளர்கள் கல்வி மையம், சர்வதேச அளவில் நடமாடும் சாகுபடி, விவசாய மற்றும் கூட்டு பணியாளர்களின் சங்கத்தின் கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

1991ம் ஆண்டு நடைபெற்ற 10வது லோக்சபாவுக்கான தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

பி.பி.கலிய பெருமாள் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.  அன்னாரது இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி அளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.