சென்னை

காவிரி மேலாணமை அமைக்காதமைக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என ரஜினிகாந்த் கூ|றி உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம் எங்கும் போராட்டம் நடந்து வருவது தெரிந்ததே.    இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   பல ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் இந்த போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது எனவும் சென்னை அணி இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துக் கொள்ள வந்த ரஜினிகாந்தை அவர் இல்ல வாசலில் செய்தியாளர்கள் சூழ்ந்துக் கொண்டு வினா எழுப்பினர்.   அப்போது அவரிடம் ஐபில் போட்டிகள் நடைபெறுவது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு ரஜினிகாந்த், “ஏழை விவசாயிகள் காவிரி நீர் கிடைக்காமல் துயருறுகின்றனர்.   அதனால் நாட்டு மக்கள் அனைவரும் அவர்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.ல்   தமிழக மக்கள் காவிரி நீர் போராட்டத்தில் மிகவும் நியாயமாக போராடி வருகிறார்கள்.  மத்திய அரசு மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனில் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தாக வேண்டும்.

ஐபிஎல் போட்டிக்களின் போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும்.  அதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு காட்ட முடியும்.  தற்போதுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இருக்க முடியாது.  அதே நேரத்தில் இவ்வாறு செய்வதன் மூலம் நாடெங்கும் இந்த செய்தியை தெரிவிக்க முடியும்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்துள்ள பதில் எனக்கு சிறிதும் திருப்தி அளிக்கவில்லை.  புதிய தொழிற்சாலைகள் அமைவதையோ தொழில் துறை வளர்ச்சியையோ நான் வெறுக்க வில்லை.;   அதே நேரத்தில் அந்த தொழிற்சாலைகளினால் மாசு ஏற்பட்டு மக்கள் துயருறுவதை நான் விரும்பவில்லை” என விடை அளித்துள்ளார்.