மும்பை,

டந்த இரண்டு ஆண்டு தடைகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி 3வது முறையாக வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம் என்றும், சென்னைக்கு வந்து ரசிகர்களுடன் வெற்றியை  கொண்டாடணும் எனறு கூறி உள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கேயின் வெற்றிவிழா சென்னையில் உள்ள ஏதாவது ஒரு அரங்கில்  பிரமாண்டமாக கொண்டடாப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்று இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. இறுதிப் போட்டி நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் கரகோஷத்துடன் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் நடைபெற்றது.

நேற்று மோதிய சிஎஸ்கே  மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் இரண்டு அணிகளின் நிர்வாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. நேற்றைய ஆட்டத்தை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பொங்கி வழிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஐதராபாத் அணி மட்டையுடன் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தது.  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து அரசித்தியது.

இந்த நிலையில்,. 179 ரன்கள் என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி மட்டையை பிடித்து. சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி சதம் அடித்து சாதனை புரிந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வாட்சன் அடித்துள்ள 2வது சதம் இதுவாகும். அவருக்கு இணையாக களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக ஆடியதால், 18.3 ஓவரிலேயே ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை கைப்பிடித்து.

இதன் காரணமாக இதுவரை நடைபெற்றுள்ள 11 சீசன் ஐபிஎல் போட்டிகளில் 9தடவை கலந்துகொண்டு விளையாடிய சென்னை அணி, ஏற்கனவே 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், தற்போது 3வது முறையாக வெற்றிக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து பேசிய கேப்டன் தோனி, ஐபிஎல் வெற்றி விழா குறித்து  இப்போதைக்கு எந்த திட்டமும் கிடையாது என்றும், வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம் என்று கூறி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய தோனி, நாங்கள் சென்னைக்கு செல்கிறோம் என்றும்,  போட்டியின் முடிவு எதுவாக இருந்திரு ந்தாலும் சென்னைக்கு சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம், அதன்படி  சென்னை போகிறோம் , அங்கு  விடுதி ஒன்றில் தங்கியிருந்து, சென்னை ரசிகர்களை சந்தித்து ஒரு மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறோம் என கூறினார்.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு காவிரி போராட்டம் காரணமாக  சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காததால்,  அதிருப்தியில் உள்ள சென்னைர  ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் சென்னையில் வெற்றிவிழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிவிழாவை தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.