தன்னை காண வந்த மூதாட்டியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த தோனி… ! வைரலாகும் வீடியோ….

Must read

மும்பை:

நேற்று மும்பையில் நடைபெற்ற  சிஎஸ்கே அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த மூதாட்டி ஒருவர், சிஎஸ்கே கேப்டன் தோனியை சந்திக்க ஆவலோடு காத்திருந்தார்.

இதையறிந்த தோனியும், அவரை காண வந்தார்.  தோனியை நேரில் கண்டதும், அந்த மூதாட்டி மகிழ்ச்சி பெருக்கில் அவரது கையை பிடித்துக்கொண்டு அளவளாவினார். இதை பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையிலும், சிஎஸ்கே வுக்கு ஆதரவாக மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ரசித்த  மும்பையைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர்   தனது பேத்தியுடன் வந்திருந்தார்.  அவர் ஆட்டம் முடிந்ததும் தோனியை சந்தித்தார். அப்போது, தோனியின் கைகளை பிடித்துக் கொண்டு அந்த மூதாட்டி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து அவரது பேத்தியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அவர் கொண்டு வந்திருந்த சிஎஸ்கே அணி பனியனில் தோனியின் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டனர்.

இதுகுறித்த வீடியோ ஐபிஎல்-ன் டிவிட்டர் வலைதளத்தில் வெளியாகினது.  இதை  தோனி  ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

தோனியின் எளிமையான நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ…பத்திரிகை.காம் வாசகர்களுக்காக…

 

More articles

Latest article