2021 ம் ஆண்டு வடகொரிய ஹேக்கர்கள் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சியை களவாடியிருப்பதாக சர்வதேச தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020 ம் ஆண்டு நான்கு முறை ஹேக் செய்து சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு களவு போன நிலையில் இந்த ஆண்டு 7 முறை ஹேக் செய்து கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிக பணத்தை கொள்ளையடித்திருப்பதாக கூறியிருக்கிறது.

கொள்ளையடிக்கப்பட்ட க்ரிப்டோ கரன்சிகள் பல்வேறு வகைகளில் பணமாக மாற்றப்பட்டு அவை அணுஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

செயின்-அனாலிசிஸ் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த தகவலில் வடகொரிய ஹேக்கர்கள் ரேன்சம்வேர் எனும் பணய செயலிகள், ஸ்பைவேர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.