மெல்போர்ன்:
ஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .இதனால் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது .பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .

தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.