கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச்.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா சென்றார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் அவரது விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் போட்டியில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அதனை எதிர்த்து ஆஸி. அரசு மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டில் நோவாக் ஜோகோவிச்சுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று வெளியேறினார்.

போட்டியில் பங்கு பெற முடியாதது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக கூறிய ஜோகோவிச் செர்பியா செல்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்லவிருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு செர்பிய அதிபர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார், மேலும் ஜோகோவிச்சின் தந்தை இது நோவாக் ஜோகோவிச் நெஞ்சில் 50 தோட்டாக்களை சுட்டதற்கு சமமானது என்று விமர்சித்திருந்தார்.