(பைல் படம்)

சென்னை:

ண்டையார்பேட்டையில் பூமியிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணை கசிவு காரணமாக அந்தப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உபயோகப்படாத நிலையில்,

தற்போது மீண்டும் எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  துறைமுகத்திலிருந்து மணலி சிபிசிஎல்., நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் செல்லும் குழாய் உடைந்து, அதன் வழியாக கச்சா எண்ணை வெளியில் கசிந்து வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

ஏற்கனவே இதுபோல் உடைப்பு ஏற்பட்டு  கச்சை எண்ணை பெருமளவில் கசிந்து பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீர் மாசுப்பட்டது.

இதன் காரணமாக தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் உள்ளத்தடி நீர் மாசு பட்டுள்ளது. இதுவரை இந்த பிரச்சினை சரி செய்யாத நிலையில் தற்போது மீண்டும் குழாய் உடைந்து கச்சா எண்ணை வெளியேறி வருவது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தற்போது கச்சா எண்ணை கசிவு காரணமாக அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டமும் மாசுப்பட்டு விடுமோ என அச்சப்படுகிறார்கள்.

கச்சா எண்ணை கசிவு குறித்து பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, எண்ணை கசிவை இடத்தை பார்வையிட்ட  இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் சேதமடைந்த குழாயை சரி செய்யாமல், மண்ணை போட்டு மூடி  உள்ளதாக அந்தப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.