சென்னை:

ஸ்டாலினுக்கு மத்தியஅரசு வழங்கி வந்த சிஆர்பிஎஃப்  பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ்,  மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில், துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு மத்தியஅரசு வழங்கி வந்த மத்திய படை பாதுகாப்பு விலக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தமிழக அரசின் நிலை என்ன என்பதை சட்டமன்றத்தில் தெளிவாக கூறியிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள றுபான்மை இன மக்களுக்கு எந்தவித சிறு இடர்பாடும் வராது,, அவர்களின் நலனை அதிமுக அரசு பாதுகாக்கும் என்றார்.

களியக்காவிலை ஆய்வாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டம் குறித்த கேள்விக்க, உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட துயர சம்பவத்திற்கு அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்கு தேவையானதை அரசு நிச்சயம் செய்யும் என்றார்.

ஆங்கிலோ இந்தியன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் கூறியிருக்கிறோம். சம்மந்தப்பட்ட அமைச்சகமும் பரிசீலப்பதாக கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து பேசியவர், இந்த ஆண்டும்  எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா எப்போதும் போல சிறப்பாக  கொண்டாடப்படும் என்றும், அப்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அரசின் சாதனைகள் குறித்து விளக்கப்படும் என்றார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்க காப்பதிலும் நிர்வாகத்திலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதை மத்திய அரசே பிரகடப்படுத்தி இருக்கிறது. இதில் இருந்தே சட்டம் ஒழுங்கை காக்கும் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.