தூத்துக்குடி:

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில்  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  வீரர் சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் இறந்த வீரர்களின் குடும்பம் மற்றும் அவர்களது கிராமங்களே சோகமாயமாக உள்ளது.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 41 பேர் பலியான தாக கூறப்படுகிறது. பலியான வீரர்களின் பெற்றோர்கள், மற்றும் குடும்பத்தினர் பதபதைப் போடு காணப்படும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோரத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்ரமணியன் பலியானதாக வும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது இறப்பு செய்தி கேட்டு… சுப்ரமணியனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டமே சோகமடைந்து உள்ளது. தூத்துக்குடி அருகே சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியனின் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது  வீரமரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

சுப்ரமணியனுடன், மற்றொரு தமிழக வீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்தவீரர் ஜெயச்சந்திரன்  என்பதும் தெரிய வந்துள்ளது.

இதில் பலியா வீரர்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை அறிந்த வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் தத்தளித்து வருகின்றனர்.

பங்கஜ் திரிபாதி குடும்பத்தினர்

பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியை சேர்ந்த வீரர் ரத்தன் தாக்கூர் வீரமரணம் அடைந்ததை, அவரது தந்தை, தனது மகனை தாய் நாட்டுக்காக பலியிட்டுள்ளேன்…. அடுத்த மகனையும் அனுப்ப தயாராக இருக்கிறேன் என்று ஆவேசமாக கூறினார்.  ஆனால் அவரது குடும்பத்தினரோ மகன் பலியான சோகத்தில் கண்ணீர் தத்தளிக்கின்றனர்.

பங்கஜ் திரிபாதி குடும்பத்தினர்

அதுபோல உ.பி. மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பங்கஜ் திரிபாதியும் இந்த கொடூர தாக்குதலில் வீர மரணம் அடைந்துள்ளார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

பக்கஜ் மரணச்செய்தி கேட்ட அவரது குடும்பத்தினரும், இளம் மனைவியும் பெரும் சோகம் அடைந்துள்ளனர். அவரது கிராமமே திரண்டு வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறது.

வாரணாசி ரமேஷ் யாதவ் குடும்பத்தினர்

வாரணாசி பகுதியை சேர்ந்த ரமேஷ் யாதவ் என்ற வீரரும் இந்த தாக்குதலில் சிக்கி வீர மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாத வாரணாசி பகுதியையே சோகக்கடலில் ஆழ்த்தி உள்ளது.