சென்னை: வடபழனியில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தின் சொத்துவரி தொடர்பாக, சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக ரஜினி சென்னை உயர்நீதிமன்ற்ததில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்து உள்ளார். ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு காரணம், உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கை மற்றும் அவர்மீது சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கடுமையான விமர்சனம் என்று கூறப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக நாடு முழுவதும் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், ராகவேந்திரா மண்டபமும் மூடப்பட்டிருந்தது. அதனால், அதற்குரிய சொத்து வரி ரூ.6.50 லட்சத்தை கட்ட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா லாக்டவுன் காரணமாக சாமானிய மக்கள் கடும் பாதிப்பை அடைந்தநிலையில், ஏராளமானோர் வீட்டு வாடகை கொடுக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டனர். அதுபோன்றவர்களிடம், வாடகையை பெறுவதில் காலஅவகாசம் வழங்க வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும் என உரிமையாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தன. அதுபோல இஎம்ஐ போன்ற வங்கிக் கடன்களுக்கும் அவகாசம் வழங்கப்பட்டன. ஆனால், எதையும் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டன.
இந்த நிலையில், பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்துள்ள ரூ6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றம், வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான செலவுகளை சுமத்துவதாகவும், அதிக அபராதம் விதிக்க நேரிடும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிரான தொடர்பாக வழக்கை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுபோல ஒரு வழக்கை தொடுத்து, நீதிமனற்ங்களால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டும், அவரது கடையை போலீசார் உதவியுடன் காலி செய்யுங்கள் என சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தது. அதுபோல, அவரது பள்ளி ஆசிரியர்கள், வேலையாட்களுக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காத நிகழ்வுகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
அதுபோல, தற்போது ரஜினியின் வழக்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில், ரஜினியின் நடவடிக்கையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததுடன், கேவலமாகவும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பொதுமுடக்கம் காலக்கட்டத்தில், தனது பண்ணை தோட்டத்தில் வாக்கிங் செல்வதற்காக, உடல்நலப் பாதிப்பு என ஏமாற்றி இ-பாஸ் பெற்று ஏமாற்றி சென்றவர்தானே ரஜினி, அதுபோலவே தற்போதும் அரசாங்கத்தை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.