சென்னை: நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அதன் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தில், நீதிபதிகள் பதவிக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என விமர்சனம் செய்திருந்தார். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று அவர் பேசியது இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயல் என்று கண்டனம் செய்யப்பட்டது.
இது சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்கு தொடரவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தமிழகஅரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த மிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், ஆடிட்டர் குருமூர்த்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்மீதான வழக்கு நவம்பர் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.