கோயம்பேடு காய்கறி சந்தைக்குப் பகலில் சரக்கு வாகனங்கள் வரத் தடை

Must read

சென்னை

கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு வாகனங்கள் பகலில் வரத் த்டை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.   இதனால் கடும் வாகன நெரிசல் காணப்படுகிறது.  இந்த வாகன நெரிசலைக் குறைக்கச் சென்னை காவல்துறை  பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  கோயம்பேடு சந்தை வர்த்தகர் சங்கத்துக்கு காவல்துறை ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பேருந்து நிலையத்துக்கு நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள், 800 தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அதிக அளவில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களைப் பகல் நேரத்தில் அனுமதிக்க இயலாது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்படி, தங்களின் முகவர்களுக்கு வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும். சரக்குகளை இறக்கிய பின்பு, போக்குவரத்து இடையூறு இல்லாமல் சரக்கு வாகனங்களைத் தகுந்த நிறுத்தத்தில் நிறுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”

எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More articles

Latest article