கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ரம்ஜான் விருந்து அளித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவி சாஸ்திரி, ஷமி எனக்கு பிரியாணி கொடுத்துவிட்டார், இன்னும் சிராஜ் மட்டும் தரவில்லை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
மே 3 ம் தேதி ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, இருவருக்கும் வாழ்த்து கூறும் விதமாக ரவி சாஸ்திரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Eid Mubarak to my Double Trouble! @MdShami11, aaj game hai ! Biryani baad. Aar ya paar. @mdsirajofficial tu do baar kha leh 💪🏻 🤗 pic.twitter.com/uvmLzKvATI
— Ravi Shastri (@RaviShastriOfc) May 3, 2022
“இன்று போட்டி இருப்பதால் போட்டி முடித்துவிட்டு பிரியாணி சாப்பிடலாம் என்று ஷமி-க்கும், நீங்கள் இரண்டு முறை பிரியாணி சாப்பிடலாம் சிராஜ்” என்று பதிவிட்டிருந்தார்.
ஷமி-யின் குஜராத் அணிக்கு அன்று போட்டி இருந்ததையும், சிராஜின் பெங்களூரு அணிக்கு அன்று போட்டி இல்லை என்பதையும் அதே நேரத்தில் சமீபகாலமா சிராஜ் சரியாக பந்துவீசுவதில்லை என்பதை குறிக்கும் விதத்திலும் இருவருக்கும் சேர்த்து “டபுள் ட்ரபுள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
Shaaami, loving it 🤗 Thanks for the Biryani @MdShami11 @mdsirajofficial, yours is pending 😜 pic.twitter.com/qmKxLQeUaY
— Ravi Shastri (@RaviShastriOfc) May 5, 2022
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒரு பதிவை வெளியிட்டிருந்த ரவி சாஸ்திரி, “ஷமி உனது பிரியாணிக்கு நன்றி… இன்னும் சிராஜ் மட்டும் பாக்கி” என்று பிரியாணி சாப்பிடும் படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார்.
ரவி சாஸ்திரியின் இந்த சுவையான பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.