சென்னை:

மிழகம் வந்துள்ள வெஸ்ட் இன்டிஸ் கிரிக்கெட் வீரர் பிரோவோ, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது, கமலுக்கு அவர் டிசர்ட் ஒன்றை பரிசளித்தார்.

தமிழகம் மீது அலாதி பிரியம் கொண்டுள்ளவர்  மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ (டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ). இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பெற்று ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.  இவர் தமிழகத்தில் இருக்கும்போது, இங்குள்ள பிரபலங்களை சந்திப்பது வழக்கம்.

அதுபோல, தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள பிரோவோ, பட்டினம்பாக்கம் அருகே உள்ள  எம்.ஆர்.சி நகரில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

இந்த  சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ சர்ட் ஒன்றையும் பிரோவோ கமல்ஹாசனுக்கு பரிசளித்தார்.